அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் கொரோனா கொத்தணி உருவானமைக்கு இலங்கையரிடம் இருந்து பரவிய கொரோனா வைரஸே காரணம் என கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அந்தப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வேறொரு நாட்டில் இருந்து இலங்கை ஊடாக மெல்போர்ன் நகருக்குச் சென்ற ஒருவராலேயே குறித்த கொரோனா கொத்தணி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.















