இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்து செல்கிறது. குறிப்பாக ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மிகாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒருநாளில் 91 ஆயிரத்து 266 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 92 இலட்சத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 77 இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 11 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 402 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 63 ஆயிரத்தை கடந்துள்ளது.