இலங்கையில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 26 கிராம சேவகர் பிரிவுகள், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.
திருகோணமலை, நுவரெலியா, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளே தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட சென்கும்ஸ் தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறிஞ்சாங்கேணி மற்றும் முனைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.