தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகளை வழங்குவது குறித்த தீர்மானம் இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைடுத்து குறித்த ஊரடங்கு கடந்த ஏழாம் திகதி மீண்டும் நீட்டிக்கப்பட்டு 14 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்து குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்புகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.