ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 30இலட்சத்து மூவாயிரத்து 112பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஈரானில் இதுவரை 81ஆயிரத்து 672பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 14 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 12ஆயிரத்து 398பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 153பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து 349பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 549பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 26இலட்சத்து 12ஆயிரத்து 91பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.