தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் இருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து 174 கிலோ கிராம், கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இருவரை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.