இலையுதிர்காலத்தில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் திட்டங்கள், அடுத்த சில வாரங்களில் அமைக்கப்படும் என சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தடுப்பூசிகளின் வெவ்வேறு சேர்க்கைகளின் சோதனைகளின் முடிவுகளுக்காக அமைச்சர்கள் காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மருத்துவர்கள் மற்றும் தேசிய சுகாதார அறக்கட்டளைகள், தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் திட்டமிடல் இப்போது தொடங்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.
அசல் கொவிட் தடுப்பூசியிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உட்பட பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுமா என்ற பிரச்சினையும் இன்னும் உள்ளது என்று சுகாதாரத் தலைவர்கள் தெரிவித்தனர்.