எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பை ஐக்கிய மக்கள் சக்தியினரினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.
எரிபொருள் விலை உயர்வுக்கு அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டும் என குற்றம் சாட்டி இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மேலும் குறித்த பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியிடம் ஆதரவு கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.