ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 91ஆயிரத்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 37இலட்சத்து 30ஆயிரத்து 599பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 484பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 34ஆயிரத்து 392பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 210பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 36இலட்சத்து ஐந்தாயிரத்து 200பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.