கொரோனா தொற்றின் புதிய திரிபு இந்தியாவின் மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி டெல்டா பிளஸ் திரிபு இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலம், கேரளாவின் பாலக்காடு மாவட்டம், மத்தியப்பிரதேசத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்று காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றின் பேரிழப்புகளில் இருந்து அண்மைக்காலமாக மக்கள் மீண்டு வருகின்ற நிலையில், இந்த வைரஸ் குறித்த தகவல்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.