இந்தியாவில் மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி மகாராஷ்டடிரா, கேரளா, மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கே மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் வைரஸானது எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களையும் எளிதில் தாக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த வைரஸ் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மூத்த விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அத்துடன் அலட்சியமாக செயற்பட்டால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை விட மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.