டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று குறுகிய காலத்தில் வீரியம் மிக்க வைரஸாக உருமாறி வருகிறது. புதிய திரிபுகளால் மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் 40 பேர் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தொற்று விஓசி எனப்படும் கவலை அளிக்க கூடிய வகையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும், கண்காணிப்பை அதிகரிக்கவும், பொது சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவின் ஒன்பது நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வகை வைரஸ் நம் நட்டில் குறைந்த அளவிலேயே உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.