இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியடைந்துள்ளது.
கார்டிப் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தசுன் சானக 50 ஓட்டங்களையும் குசல் பெரேரா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அடில் ராஷித் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்க்வுட், கிறிஸ் ஜோர்தான் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், துஸ்மந்த சமீர மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 55 பந்துகளில் 8 பவுண்ரிகள் 1 சிக்ஸர் அடங்களாக ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.