இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம் உஜ்ஜெனியில் வசித்து வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த மாதமே உயிரிழந்த நிலையில், அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றுக்கான மரபுக்கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.