இங்கிலாந்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு நீண்டகால கொவிட் அறிகுறி இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சில நேரங்களில் இது ‘நீண்ட கொவிட்’ என்று அழைக்கப்படுகிறது.
அரை மில்லியன் பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக அறிக்கை செய்யும் மூன்றில் ஒரு பகுதியினர் குறைந்தது 12 வாரங்களுக்கு நீடிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
நீண்டகால விளைவுகளை நிர்வகிப்பது ஒரு பெரிய சவால் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நீண்ட கொவிட் பற்றிய ஆராய்ச்சிக்காக அரசாங்கம் 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.