அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கக்கூடாது என பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி போடுவதால், கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று லெஜர் மற்றும் கனேடிய ஆய்வுகள் சங்கம் நடத்திய இணையக் கணக்கெடுப்புக்கு பதிலளித்தவர்களில் அறுபத்தொன்பது சதவீதம் பேர் கூறுகின்றனர்.
கனடாவில் 1,542பேரிடம் நடத்திய இணையக் கருத்துக் கணிப்பு ஜூன் 18 முதல் 20 வரை மேற்கொள்ளப்பட்டது.
பல கனடியர்கள் குறைவான உடற்பயிற்சி, எடை அதிகரித்தல், அதிக மது அருந்துதல் மற்றும் அதிக கஞ்சா புகைப்பதால் இந்த தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளனர்.
கொவிட்-19 நெருக்கடி தொடங்கியதிலிருந்து அவர்களின் மன ஆரோக்கியம் மோசமாக இருப்பதாக 63 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கின்றனர்.
பதிலளித்தவர்களில் முப்பத்தாறு சதவீதம் பேர் தங்கள் உடற்பயிற்சியின் அளவு குறைந்துவிட்டதாகவும், 39 சதவீதம் பேர் அதிக எடை அதிகரித்துள்ளதாகவும், 16 சதவீதம் பேர் தாங்கள் அதிக மது அருந்தியதாகவும், ஒன்பது சதவீதம் பேர் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து அதிக கஞ்சா புகைத்ததாகவும் கூறியுள்ளனர்
ஆறு சதவிகித கனேடியர்கள் விளையாட்டு மற்றும் கேளிக்கைக்கூட விளையாட்டுச் சூதாட்டம் உள்ளிட்ட இணையச் சூதாட்டத்திற்கு அதிக பணம் செலவழித்து வருவதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதே நேரத்தில், கணக்கெடுப்பில் 59 சதவீதம் பேர் கனடாவில் அடுத்த ஆண்டு குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.