நாட்டில் இதுவரை 25 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 131 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, நேற்று 8 ஆயிரத்து 880 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 44 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 72 ஆயிரத்து 719 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 454 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.