கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரச மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) எதிர்கட்சியினர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘நாங்கள் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்பதோடு புதியதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். மீதேன், நியூட்ரினோ, சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் அனைத்தும் மீளப் பெறப்படுகிறது.
வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், கூடங்குளம் திட்டங்களுக்கு எதிரான போராட்ட வழக்குகளும் மீளப் பெறப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.