அவசர பயணத்திற்காக வேல்ஸைச் சேர்ந்தவர்கள் இப்போது தங்கள் கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை ஒன்லைனில் பெறலாம் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
காகித தடுப்பூசி சான்றிதழ்கள் மே மாதத்திலிருந்து கிடைக்கின்றன. அவசரமாக சர்வதேச அளவில் பயணம் செய்ய வேண்டியவர்களுக்கு ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
இந்தநிலையில், அவசர பயணத்திற்காக கொவிட்-19 சான்றிதழ்களை ஒன்லைனில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார அமைச்சர் எலூனட் மோர்கன், ‘மக்கள் அவசியமானால் மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
வேல்ஸ் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது முழுமையாக கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
இலத்திரனியல் பயண அனுமதியை அணுக முடியாதவர்களுக்கு இன்னும் காகித சான்றிதழ்கள் கிடைக்கும். இது ஒரு நபரின் தொலைபேசி, டேப்லெட் அல்லது மடிக் கணனியில் காண்பிக்க பதிவிறக்கம் செய்யப்படலாம்.
வேல்ஸில் ஏற்கனவே 10,000 பேருக்கு தடுப்பூசி சான்றிதழ்கள் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.