பலுசிஸ்தானின் சிபி மாவட்டத்தில் ரோந்துப் கட்சியை ( patrolling party) பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கியதில், ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பயங்கரவாதிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது என பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில், பயங்கரவாதிகளின் தப்பிக்கும் வழிகளைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர் என்று டோன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பலூசிஸ்தானில் அமைதியின்மை அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் பலுசிஸ்தானில் அமைதியின்மை அதிகரிப்பது ஆபத்தானது. சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு உடனடி கவனம் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்