ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் ஆறு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் ஆறு இலட்சத்து 50ஆயிரத்து 16பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 39ஆவது நாடாக விளங்கும் ஒஸ்திரியாவில் இதுவரை பத்தாயிரத்து 700பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 94பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்து 265பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 69பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஆறு இலட்சத்து 37ஆயிரத்து 51பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.