இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48,698 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,01,83,143 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1,183 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய இதுவரை 3,94,493 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,91,93,085 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் 5,95,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.