கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 38இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 38இலட்சத்து 388பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள பத்தாவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை 40இலட்சத்து 92ஆயிரத்து 746பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து மூவாயிரத்து 321பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 32ஆயிரத்து 733பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 685பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 89ஆயிரத்து 37பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 155பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.