இந்தியாவினால் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது யாழ்.இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், வடக்கு மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.