நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நொரகல்ல கிராம சேவகர் பிரிவின் நொரகல்ல மேல் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் யக்தெஹிவத்த கிராம சேவகர் பிரிவின் பின்கந்த 1 மற்றும் பின்கந்த 2 ஆகிய பகுதிகளும் பாதகட கிராம சேவகர் பிரிவின் பின்கந்த 3 பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மொனராகலை மாவட்டத்தின் ஹிதிகிவுல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நக்கலவத்த கிராமம் மற்றும் மில்லகெலே வத்த கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.