தடுப்பூசி போட தயக்கம் காட்டுவது ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மக்கள் அச்சத்தை துறந்து விட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நமது விஞ்ஞானிகள், மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்பக்கூடாது.
நாடு தழுவிய அளவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமாகியது. அன்று ஒரேநாளில் மட்டும் 86 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆகவே அச்சங்களை கைவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது’எனத் தெரிவித்துள்ளார்.