தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது.
அந்தவகையில் இன்று முதல் துணிக்கடைகள், நகைக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
23 மாவட்டங்களிலும் 50 வீதமான வாடிக்கையாளர்களுடன் கடைகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஜவுளி கடைகள் திறக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டள்ளது.
சாலையோர உணவு கடைகளில் பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகளும் 100 வீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.