இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உயர்வுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நிராகரித்துள்ளார்.
ஏனெனில் இது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பால்மாவின் விலை உயர்வுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் உள்ளூர் சந்தையில் பால்மாவுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் மக்கள் ஏற்கனவே சிரமங்களைத் தாங்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் சமுதாயத்தின் நலன் கருதி செயற்பட வேண்டுமென பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.