உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை இந்த உறுதிப்படுத்தல் கிடைத்ததாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மொடர்னா தடுப்பூசியை, இலங்கை 4 ஆவது தடுப்பூசியாக பயன்படுத்தவுள்ளது.
குறித்த தடுப்பூசியை தவிர இலங்கைக்கு நேரடி நன்கொடையாக அமெரிக்காவிலிருந்து மற்றொரு தொகுதி தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.