குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் மூன்று இலட்சத்து 50ஆயிரத்து 938பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 58ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில் இதுவரை மூன்று இலட்சத்து 59ஆயிரத்து 652பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எட்டாயிரத்து 200பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 45பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 514பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.