மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பனாமாவில் கொவிட் தொற்றினால் நான்கு இலட்சத்து 666பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 53ஆவது நாடாக விளங்கும் பனாமாவில் இதுவரை ஆறாயிரத்து 524பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 789பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11ஆயிரத்து 988பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 84பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 82ஆயிரத்து 154பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.