பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகும் அங்கு பிரித்தனிய படையினர் இருந்தால் என்னவாகும்; கிரைமியா கடல் பகுதியில் போர்க் கப்பலை செலுத்தினால் ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது போன்ற பல்வேறு இரகசிய திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கென்டில் ஒரு பேருந்து நிறுத்தத்தின் பின்னால், மழை நனைத்த குவியலில் 50 பக்க ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை ஊழியர் ஒருவரால் தவறவிடப்பட்ட இந்த ஆவணங்களைக் கண்டெடுத்த ஒருவர், அதனை பிபிசி ஊடகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தநிலையில், இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.
பிபிசியின் கூற்றுப்படி, இந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அனைத்து படைகளையும் திரும்பப் பெறுவதற்கான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் திட்டத்தை நேட்டோ பின்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் பிரித்தானியாவின் இராணுவ தடம் குறித்த மிகவும் முக்கியமான பரிந்துரைகளை அந்தக் கட்டுரை கோடிட்டுக் காட்டுகிறது.