பழனியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
முக்கிய விழாவான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடைபெறவுள்ளது
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தரவுள்ளார்.
இதனை முன்னிட்டு பழனியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















