சபரிமலை ஐயப்பன் கோவில் எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு ஒரே நேரத்தில் 15 பேர் வழிப்பாட்டு தலங்களுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசை வலியுறுத்துவற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.