நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் சில கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிங்கபூர கிராமசேவகர் பிரிவின் சன்ஹிந்த செவன வீட்டுத்திட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்பொரள்ள 100 தோட்டம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காலி இந்துருவ கோனகல கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பொல்தொடுவ கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதிய வளத்தப்பிட்டி கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.