ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 29ஆயிரத்து 989பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை எட்டு இலட்சத்து எட்டாயிரத்து 42பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 132பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 39ஆயிரத்து 662பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 24பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து 38ஆயிரத்து 391பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.