பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் இலங்கை உள்ளிட்ட சில 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தடை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு காரணமாக ஏப்ரல் 29 முதல் இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் கடந்த மே 7ஆம் திகதி முதல் பயணத் தடை விதிக்கப்பட்டது.
அதன்பின்னர் அந்தத் தடை ஜுன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.