நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 4 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.
அதில் அவருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தே நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.