பிரமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இதன்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஒரு சில மூத்த தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம் எனவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


















