திஸ்ஸமஹராம பகுதியில் குளப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியப் புலனாய்வுத் திணைக்களமும் இராணுவமும் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த நபர்களால் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என சட்ட அமுலாக்க அதிகாரிகளால் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தால் சீருடை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.














