கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில், 2 இலட்சத்து 55 ஆயிரத்து 508 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.