யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்குப் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், பெறுமிக்க பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
ஒன்பது பேர் கொண்ட கும்பலே இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குறித்த வீடுகளுக்குச் சென்றிருந்த கும்பல், பெறுமதியான தளபாடங்களை அடித்து உடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.