கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. எனவே நாம் ஓய்வெடுக்கக் கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘டெல்லியில் கொரோனா பாதிப்பு நிச்சியமாகக் குறைந்துவிட்டன. ஆனால் ஒன்றரை வருட அனுபவம் நாம் எந்த சூழ்நிலையிலும் ஓய்வெடுக்கக் கூடாது என்று கூறுகிறது.
அதேபோல பொதுமக்களும், சமூகமும் ஓய்வெடுக்கக் கூடாது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக கடந்த 6 மாதங்களாக தடுப்பூசிகள் கிடைக்கிறது.
எனவே கொவிட் 19 விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமாகவும், கொரோனவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியைப் பெறலாம்’ எனத் தெரிவித்தார்.