தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த ஜேக்கப் சூமாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயங்களில் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு ஒரு தடவை மாத்திரம் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமா, அடுத்தடுத்த தவணைகளில் முன்னிலையாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.