நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜுலை மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் எதிர்வரும் 19 ஆம் திகதி மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த கூட்டம் ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாகவும், 20 அமர்வுகள் வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமர்வின் காலம் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.