தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் வரும் செய்தி ஐக்கிய மக்கள் சக்கி, ஐக்கியத் தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறினார்.
கொரோனா வைரஸைப் பார்த்து பயப்படுவதைவிட அவர்கள் அதிகம் பயப்படுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய கொரோனா பிரச்சினை மற்றும் சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு இருந்தபோதிலும் எதிர்க்கட்சி மற்றும் ஊடகங்களின் முக்கிய தலைப்பாக இப்போது பசில் ராஜபக்ஷவை குறித்தே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சரியான முடிவை எடுத்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.