இந்தியாவில் பயங்கரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்போது எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறை தளங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு படைகளுக்கு இடையே கூடுதலாக தகவல்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது, அதிகளவில் இளைஞர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.