இறுதியாக இருந்த அமெரிக்க துருப்புக்களும் நாட்டிலிருந்து விலகுவதால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் இடம்பெறுவதற்கான அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த மாதம் அமெரிக்க துருப்புக்கள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து மோதல்கள் அதிகரித்துள்ளதுடன்தலிபான்கள் பல நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் மீதமுள்ள அனைத்து அமெரிக்க துருப்புக்களும் செப்டம்பர் 11 காலக்கெடுவிற்குள் திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச துருப்புக்கள் வெளியேறியவுடன் அதன் தலைமையை ஒன்றிணைக்க முடியாவிட்டால் நாடு மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடும் என அமெரிக்க உயர்மட்ட தளபதி ஜெனரல் ஸ்காட் மில்லர் எச்சரித்துள்ளார்.
பல நகரங்களை சுற்றி வளைத்து தலைநகர் காபூலை முடக்கும் வகையில் மே மாதத்திலிருந்து 370 மாவட்டங்களில் 50 க்கும் மேற்பட்டவற்றை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.