வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தென் மற்றும் உள் மாவட்டங்கள் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், 3 ஆம் திகதி அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.