ஜிஎஸ்டி அமுல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சாதாரண மனிதர்களின் வரிச்சுமை குறைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், ‘இந்தியாவில் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது.
இது சாதாரண மனிதர்கள் மீதான வரிச்சுமையை குறைத்துள்ளதுடன், வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.